4 பயிற்சி பட்டறை

அன்பு வாசகர்களுக்கு,

தங்களின் வருகைக்கு முதற்கண் நன்றிகள் பல. புரோகிராமிங் சம்பந்தமான அடிப்படை விசயங்கள் என்று நான் கருதிய அனைத்தையும் தொடரில் பதிந்துவிட்டதாக நம்புகிறேன். அடுத்து எந்தெந்த விசயங்கள் பற்றி எழுதவேண்டும் என்று நீங்கள் தெரிவித்தால், இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) என்னால் இயன்ற அளவு அந்த விசயத்தை விளக்க முயற்சி செய்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட Programming Language ஐ சொல்லித்தருவது எனது நோக்கமல்ல. மாறாக அடிப்படையான விசயங்களை சொல்லித்தருவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

உங்களுக்கு எந்த வகையில் என்னால் உதவமுடியும் என்பதை இங்கே பட்டியலிடுகின்றேன்.

  1. ஒரு குறிப்பிட்ட logic எவ்வாறு வேலை செய்கிறது என்பதை வரிக்கு வரி ஆய்வு செய்து விளக்கமளித்தல் (debugging a program).
  2. நீங்கள் எழுதிய அல்லது உங்களுக்கு கிடைத்த Logic கில் உள்ள பிழைகள் என்னென்ன என்பதை கண்டுபிடித்து அதை சரிசெய்ய ஆலோசனை வழங்குதல்.
  3. உங்களுக்கு சிரமமாக தெரியும் logic க்குகளுக்கு ஆலோசனைகள் வழங்குதல்.
  4. Requirement Analysis என்றால் என்ன என்பதை விளக்குதல். உதாரணத்திற்கு Student Management System  போன்ற Project ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு தேவையான தகவல்கள் என்னென்ன எப்படி அவற்றை திரட்டுவது என்பது பற்றிய ஆலோசனைகள்.
  5. நாம் செய்யப்போகும் புரோகிராமுக்கு தேவையான Database design செய்வது Table design செய்வது எப்படி என்கிற ஆலோசனைகள்.
  6. Logic development குறித்த சந்தேகங்கள், உங்கள் பள்ளி கல்லூரி பாடங்கள் குறித்த சந்தேகங்களுக்கான ஆலோசனைகள்.
  7. உங்கள் Project குறித்த சந்தேகங்களுக்கான பதில்கள்

என உங்களுக்கு உதவிட காத்துக்கொண்டிருக்கிறேன். எனவே மேற்கண்ட விசயங்களில் தேவை இருக்குமானால் கேள்விகள் கேட்டு பயன்பெற்றிடுமாறு அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ஜ.முஹம்மது ரியாதுல் ஃபரீத்.
01-09-2013




4 comments: